உலகம்

ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல்.. அதிபர் டிரம்ப் பகிர்ந்த பரபரப்பு வீடியோ

Published On 2025-04-05 20:20 IST   |   Update On 2025-04-05 20:20:00 IST
  • அவர்கள் கொல்லப்படுவதும் பின்னர் அப்பகுதி முழுவது புகை பரவியதும் பதிவாகியுள்ளது.
  • "ஐய்யோ, இனி இந்த ஹவுதிகளினால் நமது கப்பல்கள் மீது எந்தவொரு தாக்குதலும் இருக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதான  அமெரிக்க தாக்குதலில் வீடியோவை அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் பகிர்ந்துள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், சுற்றி நிற்கும் ஒரு மக்கள் குழுவின் மீது டிரோன் மூலம் குண்டு வீசப்பட்டு அவர்கள் கொல்லப்படுவதும் பின்னர் அப்பகுதி முழுவது புகை பரவியதும் பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஹவுதி படையினர் எனக் குறிப்பிட்டடிரம்ப், அவர்கள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் கட்டளைகளுக்காக அங்கு கூடியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், "ஐய்யோ, இனி இந்த ஹவுதிகளினால் நமது கப்பல்கள் மீது எந்தவொரு தாக்குதலும் இருக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை எதிர்த்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வணிக மற்றும் ராணுவ கப்பல்கள் மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஏராளமான ஏமன் மக்கள் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News