ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து பிரதமர் மோடியின் பெயர் நீக்கம்!
- டொனால்டு டிரம்ப் 23 ஆம் தேதி உரையாற்றுவார்.
- அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் கலந்து கொள்கிறார்
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரை உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து பிரதமர் மோடியின் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பிரேசில் நாட்டின் பிரதிநிதி முதலில் உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 23 ஆம் தேதி உரையாற்றுவார். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றுவார்.
இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி, ரஷியா, சீனாவுடன் ஏற்பட்ட நெருக்கம் ஆகியவை சர்வதேச அரசியலில் விவாதப்பொருளாக மாறி வரும் நிலையில் ஐநா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காதது கவனம் பெற்றுள்ளது.