உலகம்

ஜி ஜின்பிங் உடன் பேசிய டொனால்டு டிரம்ப்: மீண்டும் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை

Published On 2025-06-05 21:40 IST   |   Update On 2025-06-05 21:40:00 IST
  • பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை டிரம்ப் மேற்கொண்டார்.
  • டிரம்ப் வரி விதிப்புக்கு எதிராக சீனாவும் வரி விதித்தது. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக சீனாவும் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டொலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். டிரம்ப் 2ஆவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் ஜி ஜின்பிங் உடன் முதன்முறையாக பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், டொனால்டு டிரம்ப் தங்களுக்கு நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் டொனால்டு டிரம்பும், ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

சீனாவிற்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள எதிர்மறையான நடவடிக்கைகளைத் திரும்பப் பெற டிரம்பிடம் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News