உலகம்

நீங்க அழகா இருக்கீங்க - இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு

Published On 2025-10-14 12:12 IST   |   Update On 2025-10-14 12:12:00 IST
  • நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே?
  • டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய டிரம்ப், "நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று தெரிவித்தார்.

மேலும், இதையே நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் எனவும் டிரம்ப் கிண்டலாக தெரிவித்தார். டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Tags:    

Similar News