உலகம்

"பஹல்காம் தாக்குதலில் TRF அமைப்புக்கு தொடர்பில்லை.." ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் - பாகிஸ்தான்

Published On 2025-07-20 09:32 IST   |   Update On 2025-07-20 09:32:00 IST
  • தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஆகும்.
  • அமெரிக்கா சமீபத்தில் TRF ஐ பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF), தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. ஆனால் பின்னர் அதை வாபஸ் பெற்றது.

இந்நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் TRF அமைப்புக்கு தொடர்பில்லை.. இந்தியாவிடம் ஆதாரம் கேட்டும் பாகிஸ்தான் ஈடுபட்டதாக இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் மறுத்துள்ளார்.

TRF சம்பந்தப்பட்டிருந்தால் ஆதாரங்களைக் காட்டுமாறு அவர் இந்தியாவுக்கு சவால் விடுத்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய டார், TRF ஒரு சட்டவிரோத அமைப்பாகக் கருதப்படவில்லை என்றும், தாக்குதலில் TRF ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறினார். அமெரிக்கா சமீபத்தில் TRF ஐ பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News