உலகம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது - ஜெர்மனியில் ஜெய்சங்கர் பேச்சு

Published On 2025-05-24 09:36 IST   |   Update On 2025-05-24 09:36:00 IST
  • அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது.
  • இது தொடர்பாக யாருக்கும் எந்தவிதமான தவறான எண்ணங்களும் இருக்கக்கூடாது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருப்பதாகக் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புவிசார் அரசியல், புவி பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப (டிஜிஏபி) மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பேசிய ஜெய்சங்கர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலின் முக்கிய நோக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதும், காஷ்மீரில் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையை சேதப்படுத்துவதும், நாட்டில் வகுப்புவாத மோதல்களைத் தூண்டுவதும் ஆகும் என்று தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது, அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது. பயங்கரவாதத்தை அரசு ஆதரவு கொள்கையாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து பாகிஸ்தானுடனான விவகாரங்களில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு இடமில்லை என்றும் இது தொடர்பாக யாருக்கும் எந்தவிதமான தவறான எண்ணங்களும் இருக்கக்கூடாது என்றும் போர் நிறுத்தத்தில் அதிபர் டிரம்ப் தலையீட்டை மறுத்தார்.

Tags:    

Similar News