உலகம்

பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகளை ரத்து செய்த வங்கதேச அரசு.. அடிப்படைவாதிகளுக்கு அடிபணிந்த யூனுஸ்

Published On 2025-11-05 04:56 IST   |   Update On 2025-11-05 04:56:00 IST
  • மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
  • இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என அடிப்படைவாத அமைப்புகள் எதிர்த்தன.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் காட்சி மாணவர் போராட்டங்களால் கவிழ்ந்தது. இதன்பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

இந்நிலையில் அண்மையில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.

கல்வி அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் இந்த திட்டத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அரசு இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகளை ரத்து செய்வதாக வங்கதேச கல்வித் துறை அதிகாரி மசூத் அக்தர் கான் நேற்று அறிக்கை வெளியிட்டார். இதன்மூலம் ஆரம்ப பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் கைவிடப்பட்டன. 

Tags:    

Similar News