உலகம்

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே திடீர் தீ விபத்து

Published On 2023-03-12 13:45 IST   |   Update On 2023-03-12 13:45:00 IST
  • தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
  • தீ விபத்தால் வெள்ளை மாளிகை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

வாஷிங்டன்:

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனே எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏர்கண்டிஷனரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தால் வெள்ளை மாளிகை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News