2026-ல் பூமிக்கு வரப்போகும் ஏலியன்கள்... பகீர் கிளப்பும் பாபா வாங்கா..!
- இயற்கை சீற்றங்களால் உலகின் 7 சதவீதம் முதல் 8 சதவீதம் நிலப்பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்பு.
- ஏ.ஐ. தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்து மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோக வாய்ப்பு.
2025-ம் ஆண்டு உலகம் பல இயற்கை பேரிடர்கள், விபத்துகள், வர்த்தக போட்டிகள், போர்களால் நிறைந்துள்ளது. 2025-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், 2026-ல் நிலைமை மேம்படும் என்று பலர் நம்புகிறார்கள்.
ஆனால், பால்கெரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
பாபா வாங்கா சொன்ன பல விஷயங்கள் நிஜமாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில் 2026 குறித்த அவரின் கணிப்பு விவாதப்போருளாகி வருகிறது.
பாபா வாங்கா கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டு கடந்த ஆண்டை விட மிகவும் மோசமாக இருக்கலாம்.
* உலகெங்கும் ஏற்பட்டுள்ள போர் அபாயங்கள் காரணமாக இந்த ஆண்டு 3-ம் உலகப்போர் தொடங்கும் வாய்ப்பு.
* சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு, வெள்ளம், கடும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு.
*இயற்கை சீற்றங்களால் உலகின் 7 சதவீதம் முதல் 8 சதவீதம் நிலப்பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்பு.
* ஏ.ஐ. தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்து மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோக வாய்ப்பு. 2026 அதற்கான திருப்புமுனை ஆண்டாக அமையலாம்.
* விண்வெளியிலிருந்து மர்மபொருள் உலகில் வந்திறங்கும் வாய்ப்பு. ஏலியன்களுடன் மனிதர்களுக்கு தொடர்பு ஏற்படலாம்.
* ரஷியாவில் அரசியல் தலைமை மாற்றம் ஏற்படலாம். இதனால் உக்ரைன்-ரஷியா போரில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழலாம்.
* நோய் உருவாகுதலை அறியும், அதனை தடுக்கும், அதிநவீன புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என பாபா வாங்கா கூறியுள்ளார். இதனால் பலர் அச்சத்தில் உள்ளனர்.