உலகம்

விடுவிக்கப்பட்ட கம்போடிய வீரர் தனது மகளுடன் இருக்கும் காட்சி 

Ceasefire: அமைதி ஒப்பந்தப்படி 18 கம்போடிய வீரர்களை விடுவித்த தாய்லாந்து

Published On 2026-01-01 13:48 IST   |   Update On 2026-01-01 13:48:00 IST
  • இரு நாடுகளும் கடந்த சனிக்கிழமை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இதுவரை தாய்லாந்து தரப்பில் 26 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே கடந்த டிசம்பர் 7 முதல் எல்லையில் மோதல் தொடங்கியது.

எல்லையில் நிலவி வந்த பதற்றத்தைத் தணிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் இரு நாடுகளும் கடந்த சனிக்கிழமை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

 ஒப்பந்தத்தின் ஒரு கட்டமாக, கடந்த ஜூலை மாதம் சிறைபிடிக்கப்பட்டு தனது பிடியில் இருந்த 18 கம்போடிய வீரர்களை தாய்லாந்து விடுவித்துள்ளது.

விடுவிக்கப்பட்ட 18 பேரும் எல்லைப் பகுதியில் பணியாற்றிய கம்போடிய நாட்டு இராணுவ வீரர்கள் ஆவர்.

டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கிய இந்த எல்லை மோதல்களில் இதுவரை தாய்லாந்து தரப்பில் 26 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த வீரர்கள் விடுவிக்கப்பட்டதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News