உலகம்

கொரோனா கட்டுப்பாடுகள்: சீனாவில் இருந்து வெளியேற ஆப்பிள் நிறுவனம் திட்டம்- இந்தியாவில் அமைக்க முடிவு?

Published On 2022-12-04 05:06 GMT   |   Update On 2022-12-04 05:06 GMT
  • சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இந்தியா மற்றும் வியட்நாமில் தனது வணிகத்தை அமைப்பது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

பீஜிங்:

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கொரோனா கட்டுப்பாடு மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை சீனாவில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன்கள் உற்பத்தி குறைந்து விட்டதாகவும், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளில் 5 சதவீதத்தை சீனாவுக்கு வெளியே உற்பத்தி செய்கிறது.

2025-ம் ஆண்டுக்குள் மொத்த ஆப்பிள் தயாரிப்புகளில் 25 சதவீதத்தை சீனாவுக்கு வெளியே பிற ஆசிய நாடுகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து பல ஒப்பந்த உற்பத்தியாளர்களை சீனாவில் இருந்து வேறு இடத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்தியா மற்றும் வியட்நாமில் தனது வணிகத்தை அமைப்பது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

Tags:    

Similar News