உலகம்

அமெரிக்காவில் கொள்ளையை தடுக்க முயன்ற இந்தியர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

Published On 2023-01-25 08:16 GMT   |   Update On 2023-01-25 08:16 GMT
  • தேவ்சிஷ், அவரது நண்பர் இருவரும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
  • துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்தியாவை சேர்ந்த தேவ்சிஷ் நந்தேழு (வயது23) வசித்து வந்தார். இவர் தனது நண்பர் ஒருவருடன் பிரின்ஸ்டன் பார்க் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை நோக்கி கார் ஒன்று வந்தது. காரில் இருந்து இறங்கிய இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி தேவ் சிஷ்யையும், அவரது நண்பரையும் மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பொருட்கள் கேட்டனர்.

அதற்கு தேவ்சிஷ் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் தேவ்சிஷ், அவரது நண்பர் இருவரும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தேவ்சிஷ் மார்பு அருகே குண்டு பாய்ந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தேவ்சிஷ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பருக்கு மார்பில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகாகோ பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொள்ளை முயற்சியில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேவ்சிஷ், இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், அமெரிக்காவில் என்ன செய்துகொண்டு இருந்தார் போன்ற தகவல் வெளியாகவில்லை.

இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News