உலகம்

பாக்தாத்தில் சுவீடன் தூதரகம் தாக்கப்பட்டு தீ வைப்பு

Published On 2023-07-20 02:53 GMT   |   Update On 2023-07-21 01:16 GMT
  • சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகளில் போராட்டம்
  • ஐ.நா. சபையில் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு கண்டன தீர்மானம் கொண்டு வந்தது

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர். இன்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் தூதரக அதிகாரிகள் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேலும் இதுகுறித்த முழு விவரம் சரியாக தெரியவரவில்லை. இதுகுறித்து சுவீடன் தூதுரக அதிகாரிகள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அது தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என பார்க்கப்படுகிறது.

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு ஐ.நா. சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News