உலகம்

தேர்தலில் கமலா ஹாரிஸ்க்குதான் ஆதரவு.. வீடியோ வெளியிட்டு டிரம்பை கிழித்தெடுத்த டைட்டானிக் நாயகன்

Published On 2024-10-27 15:43 IST   |   Update On 2024-10-27 15:43:00 IST
  • சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பின்படி கமலா சற்று பின்தங்கியுள்ளார்.
  • தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

உலக வல்லரசான அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்த்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. உக்ரைன் போர், பாலஸ்தீன போர்களுக்கு வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள வாக்குப்பதிவு உலக அரசியலுக்கே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இரு தரப்புக்கும் பிரபலங்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். டிரம்ப் பக்கம் தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கமலா ஹாரிஸுக்கு பாடகி டெய்லர் ஷிப்ட் ஆகியோர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனாலும் சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பின்படி கமலா சற்று பின்தங்கியுள்ளார்.

 

இந்நிலையில் ஆஸ்கார் விருது வென்ற டைட்டானிக் பட நாயகன், ஹாலிவுட் முன்னணி நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர், இந்த மாத தொடக்கத்தில் ப்ளோரிடா, ஜார்ஜியா, வட கரோலினா பகுதிகளில் ஹெலன் மற்றும் மில்டன் சூறாவளியால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

அதி சக்தி வாய்ந்த இந்த அட்லாடிக் சூறாவளியால் மக்கள் தங்களின் வீடுகளையும் உறவுகளையும் இழந்துள்ளனர். 100 பில்லியன் டாலர் வரை சேதங்களை ஏற்படுத்திய இந்த அசாதாரணமான சூறாவளி காலநிலை மாற்றத்தின் விளைவே. ஆனால் டிரம்ப் காலநிலை மாற்றை தொடர்ந்து மறுக்கிறார்.

அறிவியலையே அவர் மறுக்கிறார். பாரிஸ் காலநிலை தீர்மானத்திலிருந்து அமெரிக்காவை அவர் பின்வாங்கச் செய்தார். காலநிலை மாற்றம் நமது பூமியையும் பொருளாதாரத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறது. நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள நாம் செயலாற்றியாக வேண்டும். அதனால்தான் நான் கமலா ஹாரிஸ் -லி வாக்களிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News