உலகம்

தென் கொரிய அதிபர் லீ ஜே மியூங் சீனா பயணம்

Published On 2026-01-05 05:25 IST   |   Update On 2026-01-05 05:25:00 IST
  • உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் சீனா புறப்பட்டுச் சென்றார்.
  • அங்கு அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளைச் சந்திக்கிறார்.

சியோல்:

சீனாவில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் புறப்பட்டுச் சென்றார்.

அங்கு அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் உள்பட உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என தென் கொரிய அதிபர் மாளிகை கூறியது.

தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் சீனா புறப்படும் சில மணி நேரங்களுக்கு முன் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News