உலகம்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 25 பேர் பலி

Published On 2026-01-04 19:12 IST   |   Update On 2026-01-04 19:12:00 IST
  • மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்பியபோது விபத்து.
  • 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 14 பேரை காணவில்லை.

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோப்பில் பயணிகள் படகு கவிழ்ந்து 25 பேர் பலியான நிலையில், 14 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜிகாவா மாநிலத்தில் உள்ள அதியானி கிராமத்தில் இருந்து புறப்பட்ட படகு, யோப் மாநிலத்தில் உள்ள கார்பிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகில் 52 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் குறைந்தது 25 பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது வரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாயமான 14 பேரை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது யோப் மாநில அவசரநிலை மேலாண்மை ஏஜென்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

லீக்கேஜ் காரணமாக படகு நீரில் மூழ்கியதாக ஜிகாவா மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த சனிக்கிழமை (நேற்று) மார்க்கெட் நாள். அன்றைய தினம் பொருட்களை வாங்கிய பின்னர், சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஓட்டுனர் உயிர் பிழைத்திருந்தால், கவனக்குறைவுக்காக அவர் மீது வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News