வெனிசுலா நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்: போப் லியோ
- வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
- அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைதுசெய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வாடிகன் சிட்டி:
வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரோம் நகரின் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களிடையே போப் லியோ உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெனிசுலாவில் அமைதி திரும்பவும், அந்நாட்டின் தன்னாட்சி அதிகாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
புவிசார் அரசியல் நிலைகளைவிட வெனிசுலா மக்களின் நலன் அனைத்தையும் விட மேலானதாக இருக்க வேண்டும்.
வன்முறையை கைவிட்டு விட்டு நாடு அமைதி மற்றும் நீதியில் பயணிக்க வேண்டும்.
இந்த நெருக்கடியால் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான மற்றும் சட்ட ரீதியான பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்தார்.