உலகம்

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பள்ளி

பிரேசிலில் பள்ளிகளுக்குள் புகுந்து மர்ம நபர் துப்பாக்கி சூடு- ஆசிரியர்கள், மாணவர் உள்பட 3 பேர் உயிரிழப்பு

Published On 2022-11-25 21:27 GMT   |   Update On 2022-11-25 21:27 GMT
  • அரசு மற்றும் தனியார் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
  • துப்பாக்கியால் சுட்டவரை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாக தகவல்

எஸ்பிரிடோ சாண்டோ

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள எஸ்பிரிடோ சாண்டோ மாகாணத்தில் பள்ளிகளுக்குள் அடுத்தடுத்து புகுந்து மர்மநபர் ஒருவர், தானியங்கி துப்பாக்கி மூலம் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டார். ஒரு அரசுப் பள்ளி மற்றும் ஒரு தனியார் பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

குண்டு துளைக்காத சட்டை அணிந்து முகத்தை மூடியவாறு அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்துவது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்தார்கள் என்பது குறித்த தகவல் உடனடியாகத் வெளியாகவில்லை. அந்த நபரை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. பிரேசில் சமூக ஊடகங்களில் சூப்பாக்கிச் சூடு குறித்த வீடியோ வெளியான நிலையில், நிலைமையை கண்காணித்து வருவதாகவும், குற்றவாளியை கண்டறிய அதிகாரிகளை அனுப்பி உள்ளதாகவும் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாண ஆளுநர் ரெனாடோ தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News