உலகம்

அமெரிக்காவின் ராபர்ட் பிரிவோஸ்ட் புதிய போப் ஆக தேர்வு

Published On 2025-05-08 23:35 IST   |   Update On 2025-05-08 23:35:00 IST
  • புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
  • முதல் நாள் நடந்த வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

வாடிகன் சிட்டி:

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் இன்று ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.

இந்நிலையில், புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News