உலகம்

பிரதமர் மோடி தாய்லாந்து பயணம்- இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Published On 2025-04-04 06:44 IST   |   Update On 2025-04-04 06:44:00 IST
  • தாய்லாந்து அரசு இல்லத்தில் அந்த நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்தித்தார்.
  • பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று நடக்கிறது.

தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒன்றிணைந்து, பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தாய்லாந்து புறப்பட்டார்.

அங்கு அவருக்கு இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பிறகு தாய்லாந்து அரசு இல்லத்தில் அந்த நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்தித்தார். அங்கு அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, நேற்று மாலையில் கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மேற்பார்வையிட தாய்லாந்து, வங்காள விரிகுடா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இருதரப்பு சந்திப்புக்கு பிறகு தாய்லாந்து பிரதமர் ஷின வத்ரா - பிரதமர் மோடி முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்காளதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News