உலகம்

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

Published On 2025-07-30 06:53 IST   |   Update On 2025-07-30 06:53:00 IST
  • சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.
  • ரஷியாவின் கிழக்கு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.6 ரிக்டர் அளவுகோலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரஷியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான், ஹவாய், அலாஸ்கா மற்றும் ரஷியாவின் கிழக்கு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News