உலகம்

இத்தாலியில் அதிவேகமாக சாலையில் மோதி வெடித்த விமானம் - பதறவைக்கும் வீடியோ

Published On 2025-07-26 17:21 IST   |   Update On 2025-07-26 17:21:00 IST
  • சிறிய அல்ட்ராலைட் விமானம் சாலையில் மோதி தீப்பிடித்தது.
  • இறக்கைகள் 30 அடி நீளம் கொண்டது.

இத்தாலியில் ஒரு சிறிய விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துள்ளன வீடியோ வெளியாகி உள்ளது.

செவ்வாய்க்கிழமை, பிரெசியா நகருக்கு அருகில் நடந்த இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

சிறிய அல்ட்ராலைட் விமானம் சாலையில் மோதி தீப்பிடித்தது. விமானி உட்பட இரண்டு பேர் விபத்தில் இறந்தனர். மேலும் விமானம் வெடித்ததில் இரண்டு பைக்கர்கள் காயமடைந்தனர்.

அவசரமாக தரையிறங்க முயன்றபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஃப்ரெசியா ஆர்ஜி அல்ட்ராலைட் விமானம் கார்பன் ஃபைபரால் ஆனது. இறக்கைகள் 30 அடி நீளம் கொண்டது. விமானம் அதிவேகத்தில் சாலையில் மோதிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News