உலகம்

ஆஸ்திரேலியாவின் 5வது தூதரகம் பெங்களூருவில் அமைக்க திட்டம்- பிரதமர் அந்தோணி அல்பானிஸ்

Published On 2023-05-24 21:45 GMT   |   Update On 2023-05-24 21:45 GMT
  • பிரதமர் மோடிக்கு சிட்னியில் கவர்னர் ஜெனரல் அதிகாரப்பூர்வ மாளிகையில் வழங்கப்பட்ட அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
  • பிரிஸ்பேனில் புதிய தூதரகம் அமைப்பது என்ற இந்தியாவின் திட்டங்களையும் வரவேற்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலிய நேரப்படி நேற்று காலை அவர் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசினர். அவர்களின் பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை அதிகரிப்பது குறித்து இடம் பெற்றது.

பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிப்பது இந்த பேச்சுவார்த்தையில் முக்கியம்சமாக இருந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன் பிரதமர் மோடிக்கு சிட்னியில் கவர்னர் ஜெனரல் அதிகாரப்பூர்வ மாளிகையில் வழங்கப்பட்ட அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கடந்த ஆண்டு இறுதிச் செய்யப்பட்டது. தற்போது இரண்டு நாடுகளும் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்தார்.

மேலும் அவர், "இந்தியாவின் பெங்களூரு நகரில் எங்களது தூதரகம் ஒன்று புதிதாக அமைக்கப்படும் என அறிவித்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் நடைமுறைகளுடன், ஆஸ்திரேலிய வர்த்தக நடவடிக்கைகளை இணைப்பதற்கு அது உதவும்.

இதேபோன்று, பிரிஸ்பேனில் புதிய தூதரகம் அமைப்பது என்ற இந்தியாவின் திட்டங்களையும் வரவேற்கிறேன். ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவில் அமைய பெறும் 5-வது தூதரகம் ஆக பெங்களூரு தூதரகம் இருக்கும்" என்றார்.

Tags:    

Similar News