உலகம்

எந்த ஒப்பந்தத்திலும் இந்தியா அவசரமாக கையெழுத்திடாது: மந்திரி பியூஷ் கோயல்

Published On 2025-10-25 02:17 IST   |   Update On 2025-10-25 02:17:00 IST
  • இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
  • வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் வரிகள் மட்டும் உள்ளடக்கியது கிடையாது என்றார்.

பெர்லின்:

இந்தியா, அமெரிக்கா இடையே பரிந்துரை செய்யப்பட்ட இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி விவாதிக்க மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் ஜெர்மனி சென்றுள்ளார். பெர்லினில் நடந்த நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பேசியதாவது:

இந்தியா அவசரமாக எந்த வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது.

வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் வரிகள் மட்டும் உள்ளடக்கியது கிடையாது.

வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான இந்தியாவின் அணுகுமுறை, உடனடி வர்த்தக இலக்குகளை அடைவதற்கான அழுத்தத்தால் அல்ல, நீண்டகால தொலைநோக்கு பார்வையைக் கொண்டது. வர்த்தக ஒப்பந்தங்கள் நீண்ட காலத்திற்கு உரியவை.

இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. விரைவில் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பமென நம்புகிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News