இந்தியாவுடன் மோதலை தீர்த்த அதிபர் டிரம்புக்கு 2026 அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரை
- அவரது "தீர்க்கமான இராஜதந்திர தலையீடு மற்றும் முக்கிய தலைமை" இதற்குக் காரணம்.
- நான் நான்கு அல்லது ஐந்து முறை அதைப் பெற்றிருக்க வேண்டும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு 2026 ஆம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியுள்ளது.
சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடியின் போது அவரது "தீர்க்கமான இராஜதந்திர தலையீடு மற்றும் முக்கிய தலைமை" இதற்குக் காரணம் என்று பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) டிரம்ப்பிடம் நோபல் பரிசு பற்றி கேட்கப்பட்டபோது, "இந்தியா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தில் தனது பணி, மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் ருவாண்டாவுக்கும் இடையிலான பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு ஒப்பந்தத்தை திங்கள்கிழமை கையெழுத்திட ஏற்பாடு செய்தது உட்பட பல காரணங்களுக்காக தனக்கு அது வழங்கப்பட வேண்டும்.
நான் நான்கு அல்லது ஐந்து முறை அதைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் எனக்கு நோபல் அமைதிப் பரிசு கொடுக்க மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் அதை தாராளவாதிகளுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் பாகிஸ்தான் அவரின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளது. முன்னதாக கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருக்கு டிரம்ப் விருந்தளித்து உபாசித்தார். இந்தியா - பாகிஸ்தான் மோதலை தானே நிறுத்தியதாக அதன் பின் பேட்டியளித்தார்.