உலகம்

1991-ம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான பொருளாதார மந்தநிலையில் சிக்கித் தவிக்கும் நியூசிலாந்து

Published On 2024-12-19 16:54 IST   |   Update On 2024-12-19 16:54:00 IST
  • பொருளாதார மந்தநிலையில் நுகர்வு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
  • அடுத்தாண்டு நியூசிலாந்து நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் நம்பிக்கை

நியூசிலாந்து நாட்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எதிர்பாராதவிதமாக 2024 மூன்றாம் காலாண்டில் 1% சரிவை கண்டுள்ளது.

பொருளாதார மந்தநிலையில் நுகர்வு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் கடன் நெருக்கடியும் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட பொருளாதார சரிவைத் தவிர்த்து, நியூசிலாந்து நாட்டின் பொருளாதாரம் 1991க்கு பிறகு மிகவும் மோசமான பெருமந்தத்தை தற்போது சந்தித்துள்ளது.

அடுத்த காலாண்டில் நியூசிலாந்து நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் நிக்கோலா வில்லிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக நியூசிலாந்து நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் அந்நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News