உலகம்

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 50 பேர் உடல் கருகி பலி

Published On 2023-09-13 11:42 IST   |   Update On 2023-09-13 12:31:00 IST
  • குறுகிய தெருவில் கட்டிடம் அமைந்துள்ளதால் மீட்புப்பணியில் சிக்கல்
  • மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

வியட்நாம் மாநில தலைநகர் ஹனோயில் உள்ள 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 மாடி கட்டிடத்தின், பார்க்கிங் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அது வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப்படையினர் 70 பேரை மீட்டனர். அவர்களில் 54 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் பலர் உயிரிழந்ததாக, அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய பெரிய தீ விபத்து எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம், குறுகிய தெருவில் அமைந்துள்ளதால், தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வந்த பெண் ஒருவர், எங்களால் மிகப்பெரிய அளவில் உதவ முடியாத நிலை ஏற்பட்டது என்று கவலையுடன் தெரிவித்தார். மிகவும் குறுகிய தெருவில் கட்டிடம் உள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உயிர்ப்பலி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News