மோடி மிகவும் நல்லவர்.. நான் சொன்ன 2 நாட்களில் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது - டிரம்ப்
- நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறேன்.
- இந்த போரில் 7 புத்தம் புதிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதில் பேசிய டிரம்ப், "நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறேன்.
உங்களுக்குத் தெரியும், பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு. எங்களுக்கு ஒரு சிறந்த உறவு இருக்கிறது. பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர். ஆனால் சற்று கடினமானவர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரின்போது, நீங்கள் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கினால், நாங்கள் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று கூறினேன்.
நான் சொன்ன இரண்டு நாட்களுக்குள், மோடியும் ஷெரீப்பும் என்னிடம் பேசி போரை நிறுத்தினர்" என்று தெரிவித்தார்.
இதன்மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை நிறுத்தியதாக டிரம்ப் பேசியதன் எண்ணிக்கை 50ஐ கடனத்துள்ளது.
மேலும் இந்த போரில் 7 புத்தம் புதிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அது இந்தியா உடையதா, பாகிஸ்தான் உடையதா என்று குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.