உலகம்

தாக்குதல் நடத்திய இளைஞர் மீது சுடச்சுட காபியை ஊற்றிய அமெரிக்க பெண் எம்.பி.

Published On 2023-02-11 15:26 IST   |   Update On 2023-02-11 15:26:00 IST
  • அமெரிக்க பெண் எம்.பி. தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
  • காலை நேரத்து காபி தன்னை காப்பாற்றியதாக எம்.பி. கூறியுள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ஆளும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ஆங்கி கிரேக். இவர் நேற்று முன்தினம் வாஷிங்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்டில் சென்ற போது, உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் கிரேக்கை சரமாரியாகத் தாக்கத் துவங்கினார்.

அந்த இளைஞரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆங்கி தான் வைத்திருந்த சூடான காபியை தாக்குதல் நடத்தியவர் முகத்தில் ஊற்றினார்... சூடு தாங்காமல் வலியில் அந்த இளைஞர் ஓடவே, ஆங்கி லேசான சிராய்ப்புகளுடன் தப்பினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

சிசிடிவி காட்சிகளை வைத்து தாக்குதல் நடத்திய 26 வயது கென்ட்ரிக் ஹாம்லின் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தாக்குதல் பற்றி ஆங்கி கிரேக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'காலை நேரத்து காபி என்னை காப்பாற்றியது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறுவேன். அதிக காயம் ஏற்படவில்லை' என்று கூறி உள்ளார்.

Tags:    

Similar News