உலகம்
மெக்சிகோ அதிபர் கிளாடியாவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற நபர் - வீடியோ வைரல்
- மெக்சிகோ சிட்டியில் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிபர் கிளாடியா சந்தித்துக் கொண்டிருந்தார்.
- கிளாடியா அந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார்.
மெக்சிகோவில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாமை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிபர் கிளாடியா சந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரைப் பின்னால் இருந்து அணுகி, அவரது தோளில் கையை வைத்து, அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார்.
கிளாடியா அந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார். பின்னர் அவரது பாதுகாப்புக் குழு அந்த நபரை அங்கிருந்து அகற்றினர். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.