Gen-Z போராட்டம் எதிரொலி: நாட்டை விட்டு வெளியேறினார் அதிபர்
- ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டது.
- பலரும் ஆதரவு அளித்ததால் போராட்டங்களால் நாடு ஸ்தம்பித்தது.
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில் அதிபர் Andry Rajoelina தலைமையிலான ஆட்சிக்கு எதிராக Gen-Z போராட்டம் நடைபெற்று வருகிறது. தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. இதனை தொடர்ந்து மடகாஸ்கர் ராணுவத்தின் 'CAPSAT பிரிவு' முழு ராணுவத்தையும் கைப்பற்றி அதிபருக்கு எதிராக திரும்பியது. இதனால் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டது.
இதனிடையே, Gen-Z போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், வர்த்தக சங்கங்கள் என பலரும் ஆதரவு அளித்ததால் போராட்டங்களால் நாடு ஸ்தம்பித்தது. 16 ஆண்டுகளில், ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தங்களை வளப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை, அதே நேரத்தில் மக்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், Gen-Z போராட்டம் தீவிரம் அடைந்ததால் அபதிர் Andry Rajoelina நாட்டை விட்டு வெளியேறினார்.
ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் அதிபர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பொது இடங்களில் அதிபர் காணப்படாததால் அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.