உலகம்

ராணி உடலுக்கு அஞ்சலி செலுத்திய அதிபர் ஜோ பைடன்

ராணி எலிசபெத் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் அதிபர் ஜோ பைடன்

Published On 2022-09-18 20:55 GMT   |   Update On 2022-09-18 20:55 GMT
  • ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறுகிறது.
  • இதில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வந்துள்ளனர்.

லண்டன்:

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96), கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், லண்டன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மற்றும் அவரது மானைவி ஜில் பைடன் ஆகியோர் அமெரிக்கா சார்பில் ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று காலை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வந்துள்ளனர்.

Tags:    

Similar News