உலகம்

இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

Published On 2025-06-19 11:10 IST   |   Update On 2025-06-19 11:10:00 IST
  • இஸ்ரேலும் ஈரானும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
  • ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது.

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் 90 சதவீதத்தை எட்டி விட்டதாகவும், இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி இஸ்ரேல், ஈரான் மீது கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

தொடர்ந்து 7 ஆவது நாளாக இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது. அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனையின் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மருத்துவமனையில் சில பகுதிகள் சேதமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News