உலகம்

சிரியா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் - நேரலையில் நடந்த குண்டுவீச்சு - அதிர்ச்சி வீடியோ

Published On 2025-07-16 22:32 IST   |   Update On 2025-07-16 22:32:00 IST
  • உலகில் சுமார் ஒரு மில்லியன் ட்ரூஸ் மக்கள் உள்ளனர்
  • டமாஸ்கஸுக்கு எச்சரிக்கைகள் முடிந்துவிட்டன. இப்போது பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம்.

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தெற்கு சிரியாவின் ஸ்வீடா பகுதியில் சிறுபான்மை ஷியா பழங்குடியினரான ட்ரூஸ் போராளிகளுக்கும், சன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயுத மோதல்கள் தொடங்கின.

உலகில் சுமார் ஒரு மில்லியன் ட்ரூஸ் மக்கள் உள்ளனர், அவர்களில் பாதி பேர் சிரியாவில் உள்ளனர். இந்நிலையில் சிரியாவில் உள்ள ட்ரூஸ் மக்களைப் பாதுகாப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

"டமாஸ்கஸுக்கு எச்சரிக்கைகள் முடிந்துவிட்டன. இப்போது பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம் " என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார். ஸ்வீடா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தனது கடுமையான தாக்குதல்களைத் தொடரும் என்று அவர் எச்சரித்தார்.

பாதுகாப்பு அமைச்சராக நானும் பிரதமர் நெதன்யாகுவும் இதற்கு உறுதிபூண்டுள்ளோம் என்று காட்ஸ் கூறினார்.

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் அரசு தொலைக்காட்சி கட்டிடத்தின் மீது ஒரு குண்டு விழுந்து வெடித்தது. இதனால் நேரடி ஒளிபரப்பில் இருந்த ஒரு தொகுப்பாளர் நிகழ்ச்சியை நடுவில் விட்டுவிட்டு ஓடினார். இதன் வீடியோவை காட்ஸ் பகிர்ந்துள்ளார். 

Tags:    

Similar News