இந்தியாவுடன் இஸ்ரேல் உறுதுணையாக நிற்கும்- பெஞ்சமின் நெதன்யாகு
- ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.
- இன்று காலை வரை 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார், காரை ஓட்டி வந்தது ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.
கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக பெண் மருத்துவர் உள்ளிட்ட பல மருத்தவர்கள் சிக்கினர்.
முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக இன்று காலை வரை 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி கார் வெடி விபத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்,"
டெல்லி கார் வெடி விபத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
துயர்மிகு நேரத்தில் இந்தியாவிற்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்" என்றார்.