இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஹமாஸ் குழுவிற்கு எதிராக இரண்டாம் கட்ட போர் தொடங்கப்பட்டுள்ளது. எதிரிகளை தோற்கடிப்பதும், நமது இருப்புக்கு உத்தரவாதம் அளிப்பதும் எங்களுக்கு ஒரு முக்கிய குறிக்கோள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசாவில் மட்டும் போரில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது என ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் ஆளும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் கூறுகையில், "கடந்த அக்டோபர் 7 அன்று வெடித்த இஸ்ரேலுடனான போரில் காசாவில் குறைந்தது 7,703 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 3,500 க்கும் மேற்பட்ட குழந்தைகள்" என்றது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,405 பேரும், காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7,326 பேரும், மேற்குகரை பகுதியில் 107 பேரும் இறந்துள்ளனர். இதன்மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் பலி எண்ணிக்கை 8,838 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழி தாக்குதலால் காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இணைய தளம், செல்போன் சேவைகள் பெருமளவு துண்டிக்கப்பட்டுள்ளதால் காசா மக்கள் வெளி உலகத் தொடர்பின்றி உள்ளனர்.
காசாவில் அமைந்துள்ள ஹமாஸ் அமைப்பினரின் 150 பதுங்கு குழிகளை குறிவைத்து நேற்று ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
காசாவில் ஹமாசின் வான்படை தளபதி இஸ்லாம் அபு ருக்பே கொல்லப்பட்டான் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை மற்றும் உளவு அமைப்பான ஷின்பெட் தெரிவித்துள்ளது.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது.
இஸ்ரேல் தரைவழி தாக்குதலை முழுப்படையுடன் எதிர்கொள்ள தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
வடக்கு காசா பகுதியில் பயங்கரமான தாக்குதல் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.