இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஹமாஸ்- இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரேலில் ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் குடியிருப்பு பகுதிகள் மீது ராக்கெட் குண்டுகள் விழுந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் இருந்த மக்களின் நிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
எகிப்து தபா பகுதியில் ஏவுகணை தாக்குதல்- ஐந்து பேர் காயம்
மத்திய கிழக்குப் பகுதியில் 900 வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று பென்டகன் தெரிவித்துள்ளது
ஹமாஸ் அமைப்பின் வடக்கு பகுதியின் தளபதி ஹசான் அல் அப்துல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. துல்லியமான வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மீது காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது. சைரன் ஒலித்ததால், பாதுகாப்பு அறைக்கு மக்கள் தப்பியோடினர். சைரன் சத்தம் கேட்டு உயிர் பயத்தில் சாலைகளின் ஓரத்தில் மக்கள் பதுங்கினர்.
ரஃபா எல்லையை திறக்க வலியுறுத்தக்கோரி பாலஸ்தீனர்கள், அரபு நாடுகள், இஸ்லாமியர் நாளை போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் மோதலின் தீவிரம் கடுமையான, மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான விளைவுகளால் நிறைந்துள்ளது. இது மத்திய கிழக்கு எல்லைகளுக்கு அப்பால் வெகுதூரம் பரவக்கூடும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக டெல் அவிவ் நகரம் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் நவம்பர் 2-ம் தேதி வரை ரத்து செய்துள்ளோம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்த இஸ்ரேல், ஹமாசை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது.