இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேலுக்கு உதவும் வகையில், போர்க்கப்பலில் இருந்து விமானங்களை இயக்கும் வீரர்களை மத்திய தரைக்கடலுக்கு அனுப்ப இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவதற்கு முன், ஜெர்மன் மாடல் ஷானி லௌக் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ...
Shani Louk probably moments before Hamas raped her, broke her limbs and killed her, then paraded around her naked dead body in the back of a pick up truck spitting on her and yelling "Allahu Akbar"#Gaza #Palestine #Israel #Hamas #Hezbollah #Iran #TelAvivpic.twitter.com/bocDRbClHh
— PMoon (@stevex100) October 9, 2023
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று ஐ.நா. அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து உறுப்பினர் நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இருந்த போதிலும், இறுதியில் ஐ.நா. எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காஸா போரில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டால் அமெரிக்க தளங்களும் துருப்புகளும் சட்டபூர்வமான இலக்குகளாக மாறும் என்று ஈரானுடன் இணைந்த ஈராக் ஆயுதமேந்திய குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஆயிரம் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் தெற்கு இஸ்ரேலில் சண்டை நடைபெற்று வருகிறது- இஸ்ரேல்
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியில் இணைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது
காஸாவில் பலி எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது என்று பாலஸ்தீன சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் நியாயமான முறையில் செயல்பட வேண்டும். காஸா- இஸ்ரேல் பதட்டத்தை தூண்டும் வகையில் செயல்படாத வண்ணம் விலகியிருக்க வேண்டும் என் துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.