இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய தரைவழி தாககுதலில் இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
ராபா எல்லை திறக்கப்பட்ட நிலையில், காயம் அடைந்த 21 பாலஸ்தீனர்கள், 72 குழந்தைகள் உள்பட 344 வெளிநாட்டினர் காசாவில் இருந்து வெளியேறியதாக எகிப்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா நகர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், இஸ்ரேல் துருப்புகள் கருப்பு பைகளில் சுற்றப்பட்டு சொந்த நாடு திரும்புவார்கள் என ஹமாஸ் ராணுவ படைப்பிரிவு எச்சரித்துள்ளது.
ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா பள்ளிக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரிவித்தார்.
மனிதாபிமான உதவிப் பொருட்கள் அடங்கிய 60-க்கும் மேற்பட்ட லாரிகள் இன்று காசாவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றத்துக்கு சமமானது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு தகுந்த பாடத்தைக் கற்றுக்கொடுப்போம். அக்டோபர் 7-ம் தேதி நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடத்துவோம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரு இடைநிறுத்தம் தேவை என்று நான் நினைக்கிறேன், ஒரு இடைநிறுத்தம் என்பது கைதிகளைப் பெறுவதற்கு நேரம் கொடுப்பதாகும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
காசாவை சேர்ந்த ஆயிரம் குழந்தைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என, ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.