இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஜபாலியா அகதி முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 195 பேர் உயிரிழந்ததாகவும், 120 பேரை இன்னும் காணவில்லை என்றும், 777 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் ஹமாஸ் நடத்தும் அரசுக்கான மீடியா அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் டிரோனை தரையில் இருந்து வான்நோக்கி தாக்கும் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
காசாவில் படுகாயம் அடைந்தவர்கள், வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வெளியேறுவதற்காக காசா எல்லை திறக்கப்பட்டுள்ளது.
காசாவில் இருந்து எகிப்து நாட்டின் ராபா எல்லை வழியாக வெளிநாட்டினர் வெளியேறி வருவகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யும் எண்ணெய் மற்றும் உணவுப் பொருள்களை இஸ்லாமிய நாடுகள் நிறுத்த வேண்டும் என ஈரான் தலைவர் கொமேனி தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மற்றொரு தளபதி கொல்லப்பட்டான் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் நடைபெற்று வரும் சண்டையில் 9 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நாளை மறுதினம் இஸ்ரேல் வருகிறார். ஏற்கனவே கடந்த மாதம் 16-ம் தேதி அவர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.
இஸ்ரேல் உடனாக தூதுரக உறவை திரும்பப் பெற்றுள்ளது சிலி. பொலிவியாவும் தூதரக நட்பை முறித்துக் கொண்டுள்ளது.
ஏமனில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பினர், எய்லாட் நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இஸ்ரேல் ராணுவம் அதை இடைமறித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.