இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத குழுவினர் இடையே தொடர்ந்து நடந்து வரும் சண்டையை முன்னிட்டு, இஸ்ரேல் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் வரவுள்ள நாட்களில் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலில் ரஷியர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் காணவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
சிறை கைதிகளை பரிமாற்றிக் கொள்ளும் விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கத்தார் மத்தியஸ்தம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக காசா நகரிலுள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. அங்கு 2,000 படுக்கைகளே உள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
காசா மீது தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். இந்த வான்வழி தாக்குதலால் 1.80 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறினர். 1.37 லட்சம் பேர் ஐ.நா. நடத்தும் 83 பள்ளி முகாம்களில் தஞ்சம் என தகவல்.
பாலஸ்தீனியர்களின் பக்கம் நின்று இந்த நிகழ்வை பார்க்கவில்லை என்றால் தவறான திசையில் இருக்கிறீர்கள் என ஆபாச பட நடிகையான மியா கலிபா, இஸ்ரேல் போர் குறித்துக் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவருடன் செய்திருந்த ஒப்பந்தங்களை இரண்டு பிரபல நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.
இஸ்ரேலின் தெற்கே அமைந்துள்ள பீர்ஷெபா நகரின் மீது தொடர்ந்து ராக்கெட் ஏவுகணை தாக்குதல் நடத்தினோம் என ஹமாஸ் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பிணைக்கைதிகளை கொலை செய்து டிவி நேரலையில் ஒளிபரப்புவோம் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமாஸ்- இஸ்ரேல் போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நிற்பதாக சவுதி பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார்.