இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
எங்கள் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், எல்லை பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் கடற்படை காசா கடற்பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ளது.
நீண்ட நாள் போருக்கு தயார் என்று ஹமாஸ் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் இருந்து தாய்லாந்து நாட்டினர் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
லண்டனில் பாலஸ்தீன ஆதரவாளர்கள்- இஸ்ரேல் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இஸ்ரேல் போரில் உள்ளது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனம் வழியாக எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் போரை தொடங்காத போதிலும், இஸ்ரேல் போரை முடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரித்துள்ளார்.
நாங்கள் போரில் இருக்கிறோம். அதனால், பேச்சுவார்த்தைக்கோ அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கோ உரிய தருணம் இது இல்லை. நாங்கள் இன்னும் எங்களுடைய எல்லை பகுதியை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னட் போர் முனையில் வீரர்களுடன் ஒன்றாக கைகுலுக்கி கொண்ட காட்சிகள் வெளிவந்துள்ளன. பகுதிநேர பணியாக அவர் போரில் பங்கேற்க சென்றுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300-ஐ கடந்தது.
இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களை காக்க போராடி வருகிறோம் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மேலும், அப்பாவி மக்களை கொல்வது குற்றமாகும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.