இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
காசா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் ராணுவம் கொண்டு வந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. காசா எல்லையை முற்றிலுமாக இஸ்ரேல் முடக்கியது. உணவு, எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் எதிரொலி- காஸாவில் இருந்து 1,23,000 பேர் வெளியேற்றம்
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் 2382 பேர் காயம் அடைந்துள்ளனர். 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காஸா மீது நேற்றிரவு 500 முறை தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்
இஸ்ரேல் நாணயத்திற்கு ஆதரவாக 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை விற்க இருக்கிறது இஸ்ரேல் மத்திய வங்கி
ஹமாஸ் ஏவுகணை தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
ஹமாஸ்- இஸ்ரேல் போர் காரணமாக எண்ணெய் விலை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான தீர்வு குறித்து பேசுவற்கான நேரம் இது அல்ல என்று சீனாவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் உள்ள தங்கள் நாட்டினரை வெளியேற்றும் பணியில் பிரேசில் நாடு ஈடுபட்டு வருகிறது.
சீனாவின் ஹைனான் ஏர்லைன்ஸ் ஷாங்சாய்- இஸ்ரேல் விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளது