உலகம்

23 ஆண்டுகளுக்குப் பிறகு... ஈராக் நாட்டை விட்டு வெளியேறியது அமெரிக்க படைகள்

Published On 2026-01-20 09:22 IST   |   Update On 2026-01-20 09:22:00 IST
  • கடந்த 2003ல் சதாம் உசேன் ஆட்சியை கவிழ்க்க ஈராக்கை அமெரிக்கா படையெடுத்தது.
  • அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் தஞ்சம் அடைந்தன.

ஈராக் ராணுவ தளங்களில் இருந்து சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியது.

கடந்த 2003ல் சதாம் உசேன் ஆட்சியை கவிழ்க்க ஈராக்கை அமெரிக்கா படையெடுத்தது. அந்த சமயத்தில் ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் தஞ்சம் அடைந்தன. இந்த விமானத் தளத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படைகள் இருந்தன.

2023 ஆம் ஆண்டில் ஈராக் அரசாங்கம் அழைப்பு விடுத்ததிலிருந்து அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் இருந்த படைகளை அமெரிக்க இராணுவம் பல ஆண்டுகளாக அதைக் குறைத்து வந்தது.

இந்நிலையில், ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறியதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .

இனிமேல் அமெரிக்கா உடனான உறவு, நேரடி ராணுவ தலையீடாக இல்லாமல், இருதரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என ஈராக் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News