உலகம்

அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்கிறது இந்தியா - டிரம்ப் அறிவிப்பு - நாளை முதல் நடக்கும் மாற்றம்

Published On 2025-04-01 14:27 IST   |   Update On 2025-04-01 14:27:00 IST
  • அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய 87 சதவீத பொருட்கள் பாதிக்கப்படும்.
  • அமெரிக்க இறக்குமதிக்கு வரியை குறைத்தால் அதனால் இந்தியாவுக்கு 23 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும்.

இந்தியா அமெரிக்க இறக்குமதிக்கு அதிகமாக வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் நாளை (ஏப்ரல் 2ஆம் தேதி) முதல் இந்தியா மற்றும் இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளோடு ஏற்கனவே டொனால்டு டிரம்ப் வர்த்தகப் போரை தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய 87 சதவீத பொருட்கள் டிரம்ப் நிர்வாகத்தின் போட்டி வரி நடவடிக்கையால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு 66 பில்லியன் டாலர்கள்.

இந்நிலையில் இந்த போட்டி வரியை தவிர்ப்பட்டதற்காக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் வரியை இந்தியா குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அந்த தகவலை கொடுத்தவர் டொனால்டு டிரம்ப். வெள்ளை மாளிகை ஓவல் அலுவலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தியா அதன் வரிகளை கணிசமாகக் குறைக்கப் போகிறது என்று கேள்விப்பட்டேன். பல நாடுகள் தங்கள் வரிகளை கைவிடப் போகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இறக்குமதிக்கு வரியை குறைத்தால் அதனால் இந்தியாவுக்கு 23 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News