உலகம்

பாதுகாப்பான இடத்திலேயே இருங்கள்: ஈரான் அதிபர் மன்னிப்பு கேட்ட நிலையில் கத்தார், யுஏஇ மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2026-03-07 21:28 IST   |   Update On 2026-03-07 21:28:00 IST
  • வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் தொடராது என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.
  • இருந்தபோதிலும் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் இருந்து கொண்டுதான் உள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் இன்றுடன் 8-வது நாளாக நீடிக்கிறது. இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை ஈரான் கடுமையாக தாக்கி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு உதவாத வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம். தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் தெரிவித்திருந்தார்.

அவர் மன்னிப்பு கேட்ட நிலையில், டிரோன் தாக்குதல் வளைகுடா நாடுகள் மீது நீடித்தன. இந்த நிலையில் கத்தார் அரசு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கான உயர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கத்தார் உள்துறை அமைச்சர் அந்நாட்டு மக்களுக்கு செல்போன் மூலம் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் பாதுகாப்பு அச்சுறுத்துதலுக்கான உயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொடர்ந்து பூட்டிய வீட்டிற்குள் இருக்க வலியுறுத்தியுள்ளார். இன்று 2-வது நாளாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் "ஈரானின் ஏவுகணை அச்சுறுத்தலுக்கு வான் பாதுகாப்பு பதில் கொடுத்து வருகிறது. மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடத்தில் இருக்கவும். மக்கள் எச்சரிக்கை மற்றும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ள அப்டேட்ஸ்களை பின்பற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News