உலகம் (World)

ஐ.நா.சபை

உக்ரைன் பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைப்பு - ஐ.நா. கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது

Published On 2022-09-30 20:06 GMT   |   Update On 2022-09-30 20:06 GMT
  • உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக அதிபர் புதின் அறிவித்தார்.
  • உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐ.நா. சபை பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்தார்.

நியூயார்க்:

உக்ரைனுடன் 7 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டு உள்ளது என மாஸ்கோவின் கிரெம்ளின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய பகுதிகளை இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது.

உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்தது. ரஷியா வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்தன.

Tags:    

Similar News