உலகம்

வரலாற்றில் அதிகபட்ச தொகை..! அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஏலம் போன ஓவியம்

Published On 2025-11-20 15:48 IST   |   Update On 2025-11-20 15:48:00 IST
  • ஒவியத்திற்கான ஏலம் 20 நிமிடங்களில் முடிந்தது.
  • ஓவியத்தில் குஸ்டாவ் கிளிம்ட் தனது முக்கிய வாடிக்கையாளரின் மகளை சித்திரித்திருந்தார்.

ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல ஓவிய கலைஞர் குஸ்டாவ் கிளிம்ட் வரைந்த ஓவியத்தை அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த சோதேபிஸ் ஏல நிறுவனம் ஏலம் விட்டது.

இதை ஏலம் எடுக்க 6 பேர் போட்டிபோட்டனர். இதில் அந்த ஓவியம் 236.4 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி) ஏலம் போனது.

ஏலம் எடுத்தவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஏலம் 20 நிமிடங்களில் முடிந்தது. ஏல வரலாற்றில் 2-வது அதிகபட்ச விலைக்கு விற்பனையான ஓவியம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஓவியம் 1914-1916ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வரைந்ததாகும். இந்த ஓவியம் லிசபெத் லெடரர் என்ற பெண் வெள்ளை அங்கி அணிந்து நீல நிற திரைச்சீலையின் முன் நிற்பதை காட்டும் ஓவியமாகும்.

அந்த ஓவியத்தில் குஸ்டாவ் கிளிம்ட் தனது முக்கிய வாடிக்கையாளரின் மகளை சித்திரித்திருந்தார்.

இந்த ஓவியம் 2-ம் உலக போரின்போது நாஜி படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. பின்னர் அந்த ஓவியம் 1948-ம் ஆண்டு மீட்கப்பட்டது.

 

Tags:    

Similar News