உலகம்

சேவல் சண்டை அரங்கில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் - 12 பேர் பலி - பரபரப்பு வீடியோ

Published On 2025-04-19 17:04 IST   |   Update On 2025-04-19 17:04:00 IST
  • சுமார் 20,000 டாலர்கள் பரிசுத் தொகையைத் திருடிச் சென்றனர்.
  • குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஈக்வடார் நாட்டில் சேவல் சண்டையின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காயமடைந்தனர்.

மனாபி மாகாணத்தில் வலென்சியாவில் உள்ள சேவல் சண்டை அரங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சண்டையை பார்க்க மக்கள் கூடியிருந்த நிலையில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு சுமார் 20,000 டாலர்கள் பரிசுத் தொகையைத் திருடிச் சென்றனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு டொமிங்கோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த தாக்குதல் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த விசாரணை நடந்து வரும் சூழலில் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News