உலகம்

முதலில் எச்சரிக்கை.. தொடர்ந்து குண்டு மழை - ஏமன் துறைமுக நகரம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

Published On 2025-09-17 01:38 IST   |   Update On 2025-09-17 01:38:00 IST
  • இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
  • முன்னதாக ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசி 33 பத்திரிகையாளர்களைக் கொன்றது

ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுக நகரம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செங்கடலில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேல் அங்கு 12 தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்கப் போவதாக இஸ்ரேல் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. 

ஹவுதிக்களின் ராணுவ கட்டமைப்புடை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாகவும் ஹொடைடா துறைமுகத்தில் உள்ள மக்களும் கப்பல்களும் தங்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தனது எச்சரிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 10 அன்று ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசி 33 பத்திரிகையாளர்களைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News